எடப்பாடிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் ரெடி: டிடிவி.தினகரன்
Advertisement
மேலூர்: மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை விட செங்கோட்டையன் சீனியர். இவ்வளவு நாள் யோசித்து இப்படி ஒரு முடிவை செங்கோட்டையன் எடுத்திருக்கிறார் என்றால் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட, துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதற்கு தயாராகி விட்டார் என்பதுதான் அவரது நடவடிக்கையில் தெரிய வருகிறது. நட்புரீதியாக பாஜவில் இருந்து பேசுகிறார்கள். மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை.
இவ்வாறு கூறினார்.
Advertisement