Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

"அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்".. அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!!

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு : "தமிழ்நாடு என்ற பெயரை மாநிலத்திற்குச் சூட்டி, இருமொழிக் கொள்கையால் தமிழரைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள்.

‘மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்குச் சேவை செய்! அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு’ என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை. பேரறிஞரின் பாதையே, சமூகநீதியைப் பேணிக் காத்து, ஆதிக்கம் எனப்படும் பேதைமையை ஒழிக்கும், பேராயுதம். அண்ணா வழியில் அயராது உழைப்போம்! வெல்வோம்!"

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி : அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த

சாமானிய மனிதன்!

தலைமுறைகள் தாண்டி,

எல்லோரும் விரும்பி விளிக்கும்

"அண்ணா"!

"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"

என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று..."