சென்னை: பி.எல்.எம். பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ரூ.5,000 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பிரேம்குமாரை கேரள போலீசார் சென்னையில் கைது செய்தனர். தொழிலதிபர் பிரேம்குமாரை கடந்த வாரம் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் வைத்து கைதுசெய்தனர். இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பிரேம்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில் பி.எல்.எம். பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டில் உள்ள பி.எல்.எம். அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தொழிலதிபர் பி.எல்.எம். பிரேம்குமார் தொடர்புடைய மேலும் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.


