சென்னை: முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளுவதற்காக, ஆந்திரா மின்வாரிய உதவிகளை கோரியுள்ளது, என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். முரசு புயலானது சென்னைக்கு 160 கி.மீ வடகிழக்கில் தீவிரப் புயல் மையம் கொண்டுள்ளது, ஆந்திராவின் நெல்லூருக்கு 120 கி.மீ., ஓங்கோலிலில் 180 கி.மீ. தொலைவிலும் முரசு புயல் மையம் கொண்டுள்ளது.
எனவே முன்னதாக மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த முரசு புயல், நகரும் வேகம் குறைந்ததுள்ளது. இனிலையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது; முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளுவதற்காக, ஆந்திரா மின்வாரிய உதவிகளை கோரியுள்ளது, முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளுவதற்காக, அண்டை மாநிலத்திற்கு தேவையான உதவியை உடனடியாக செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின் பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆந்திரா செல்லும் குழுக்கள் அமைப்பானது, முரசு புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளவதற்காக தமிழ்நாட்டில் இருந்து 500 மின் வாரிய பணியாளர்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.


