தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிழக்கு லடாக் எல்லையில் நல்ல முன்னேற்றம்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

Advertisement

பிரிஸ்பேன்: இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர். இதையடுத்து டெம்சோக் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் வழக்கமான ரோந்து பணியை ஆரம்பித்தது. இதேபோல் டெப்சாங் பகுதியில் நேற்று முதல் இந்திய ராணுவம் ரோந்து பணியை தொடங்கி உள்ளது.

இதனிடையே ஆஸ்திரேலியா வில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், “2020ம் ஆண்டுக்கு பிறகு உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் சீன துருப்புகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவும் அதிக வீரர்களை நிறுத்தியது. இதனால் இருதரப்பு உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. 4 ஆண்டுகால பிரச்னைக்கு தற்போது முடிவு எட்டப்பட்டு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார்.

Advertisement

Related News