திருவனந்தபுரம்: சட்டத்தை மீறி பூடானிலிருந்து வரி ஏய்ப்பு செய்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த விவகாரத்தில், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்காலைக்கல் உள்ளிட்டோரின் 50க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது. பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக நடிகர்கள் துல்கர் சல்மான், அமித் சக்காலைக்கல் உள்பட கார்கள் கைப்பற்றப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக இவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
+
Advertisement
