Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வடக்கு மண்டலத்தை வீழ்த்தி துலீப் கோப்பை பைனலுக்கு முன்னேறியது தென் மண்டலம்

பெங்களூரு: வடக்கு மண்டல அணியுடனான 2வது அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் மண்டல அணி, துலீப் கோப்பை பைனலுக்கு முன்னேறியது. பெங்களூரு, உயர் செயல்பாட்டு மைய வளாக 2வது மைதானத்தில் நடந்து வந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 195 ரன்னுக்கு சுருண்ட நிலையில், தென் மண்டலம் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 117 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வடக்கு மண்டலம் 297 ரன் குவித்து ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து, கடைசி நாளான நேற்று 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் மண்டல அணி, 43.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.தொடக்க வீரர்கள் ரிக்கி புயி 42 ரன், நாராயண் ஜெகதீசன் 43 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். ஷேக் ரஷீத் 1 ரன்னில் அவுட்டானார். கேப்டன் திலக் வர்மா 51 ரன், ரவிச்சந்திரன் ஸ்மரன் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் 116 ரன் மற்றும் 51 ரன் விளாசிய தென் மண்டல அணி கேப்டன் திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ள துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் (செப். 6-10) கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் மோதுகின்றன.