துலீப் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: மத்திய மண்டலம் - கிழக்கு மண்டலம் மோதல்: தெற்கு - வடக்கு பலப்பரீட்சை
பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று காலை 9.30க்கு தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் மத்திய மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகளும், 2வது அரையிறுதியில் தெற்கு - வடக்கு மண்டல அணிகளும் மோதுகின்றன.மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் கிழக்கு, வடக்கு அணிகள் காலிறுதி போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.
பெங்களூருவில் உள்ள உயர்செயல்பாட்டு மைய வளாகத்தின் 2 மைதானங்களில் அரையிறுதி ஆட்டங்கள் (4 நாள் போட்டி) இன்று தொடங்குகின்றன. முதல் அரையிறுதியில் ரஜத் பத்திதார் தலைமையிலான மத்திய மண்டல அணியுடன் இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலம் மோதுகிறது.கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, காலிறுதியில் 8 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானதால் சற்று நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.
அந்த போட்டியில் சுதிப் குமார் கராமி 146 ரன், ஷாபாஸ் அகமது 167 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது.மற்றொரு அரையிறுதியில் திலக் வர்மா தலைமையிலான தென் மண்டல அணி, வாதவான் தலைமையிலான வடக்கு மண்டலத்தை எதிர்கொள்கிறது.இறுதிப் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் செப்.6ல் தொடங்குகிறது (5 நாள் போட்டி).
தெற்கு மண்டலம்: திலக் வர்மா (கேப்டன்), ரிக்கி புயி (துணை கேப்டன்), அமன் கான், ஷ்ரேயாஸ் கோபால், கொடிமேலா ஹிமதேஜா, நாராயண் ஜெகதீசன், வித்வத் கவரெப்பா, கருண் நாயர், எம்.டி.நிதீஷ், ஷேக் ரஷீத், கவுரி சாய்தேஜா, ரவிச்சந்திரன் ஸ்மரன், அபினவ் தேஜ்ராணா, தனய் தியாகராஜன், திரிபூரணா விஜய்.
வடக்கு மண்டலம்: கன்ஹையா வாதவான் (கேப்டன்), ஆயுஷ் பதோனி (துணை கேப்டன்), அப்துல் சமத், அபித் முஷ்டாக், அர்ஷ்தீப் சிங், ஆயுஷ் தோசெஜா, யஷ் துல், அன்ஷுல் காம்போஜ், சுனில் குமார், நிகில் காஷ்யப், கம்ரான் இக்பால், சனத் சங்வான், அர்ஜுன் ஷர்மா, நிஷாந்த் சிந்து, யுத்வீர் சிங்.மத்திய மண்டலம்: ரஜத் பத்திதார் (கேப்டன்), ரிங்கு சிங் (துணை கேப்டன்), அர்ஷத் கான், நசிகேத் பூட்டே, குணால் சந்தேலா, ஹர்ஷ் துபே, சரண்ஷ் ஜெயின், ஆர்யன் ஜுயல், அமன் மோகடே, ஆயுஷ் பாண்டே, யஷ் ரத்தோட், குணால் சிங் ரத்தோர், யஷ் தாகூர், ஜீஷன் அன்சாரி.
கிழக்கு மண்டலம்: இஷான் கிஷன் (கேப்டன்), வைபவ் சூரியவன்ச்ஷி (துணை கேப்டன்), டேனிஷ் தாஸ், அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, சுராஜ் ஜெய்ஸ்வால், குமார் குஷக்ரா, முகமது ஷமி, ஷிகர் மோகன், முகேஷ் குமார், அனுகுல் ராய், அபிஜித் சர்கார், சுப்ரான்ஷு சேனாபதி, ஷாபாஸ் அகமது, விராத் சிங்.



