Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

துலீப் டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது வடக்கு மண்டலம்

பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதியில், மேற்கு மண்டல அணியை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய வடக்கு மண்டலம் அரையிறுதிக்கு முன்னேறியது. பெங்களூருவில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 251 ரன், மேற்கு மண்டலம் 187 ரன் எடுத்து ஆட்டமிழந்தன. 64 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய வடக்கு மண்டல அணி 222 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு மண்டலம், 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி மேற்கொண்டு 14 ரன் மட்டுமே சேர்த்து 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (57.3 ஓவர்).

முஷீர் கான் 96, கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 66, ஷிவாலிக் ஷர்மா 27, உர்வில் படேல் 25 ரன் எடுக்க, மற்ற வீர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தது குறிப்பிடத்தக்கது. 52 ரன் வித்தியாசத்தில் வென்ற வடக்கு மண்டலம் அரையிறுதிக்கு முன்னேறியது. பெங்களூருவில் ஆக.30ல் தொடங்கும் அரையிறுதி ஆட்டங்களில் மத்திய மண்டலம் கிழக்கு மண்டலம், தென் மண்டலம் வடக்கு மண்டலம் மோதுகின்றன.