Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

துலீப் கோப்பை முதல் அரையிறுதி: மத்திய மண்டலம் 266 ரன்னில் ஆல் அவுட்

பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டலத்துக்கு எதிராக மத்திய மண்டலம் முதல் இன்னிங்சில் 266 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பெங்களூரு, பிசிசிஐ கிரிக்கெட் உயர் செயல்பாட்டு மைய வளாக முதல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அமன் மொகாடே, ஆர்யன் ஜுயல் இணைந்து மத்திய மண்டல இன்னிங்சை தொடங்கினர். மொகாடே 8 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த குணால் சந்தேலா 6, கேப்டன் ரஜத் பத்திதார் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆர்யன் ஜுயெல் 46 ரன் (113 பந்து, 6 பவுண்டரி) எடுத்து முகேஷ் குமார் பந்துவீச்சில் குஷக்ரா வசம் பிடிபட்டார். யஷ் ரத்தோட், ஹர்ஷ் துபே தலா 27 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். சரண்ஷ் ஜெயின் 13 ரன் எடுக்க, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ரிங்கு சிங் 60 ரன் (88 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.

ஆர்யன் பாண்டே 22 ரன், அர்ஷத் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, மத்திய மண்டலம் 80.1 ஓவரில் 266 ரன் குவித்து ஆல் அவுட்டானது. யஷ் தாகூர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிழக்கு மண்டல பந்துவீச்சில் முகேஷ் குமார், அபிஜித் சர்கார் தலா 3 விக்கெட், முகமது ஷமி, முகமது கவுனைன் குரேஷி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் நாளான இன்று கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.

* டிஆர்எஸ் கேட்டு சாதித்த கேப்டன் சூரியவன்ஷி!

கிழக்கு மண்டல கேப்டன் இஷான் கிஷன் நேற்று விக்கெட் கீப்பிங் செய்தபோது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வுக்காக பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, துணை கேப்டனான 15 வயது சூரியவன்ஷி தற்காலிகமாக கேப்டன் பொறுபேற்றார். 46 ரன் எடுத்திருந்த மத்திய மண்டல வீரர் ஆர்யன் ஜுயெல் முகேஷ் குமார் பந்தை எதிர்கொண்டபோது, அது மட்டையில் பட்டு கீப்பர் குமார் குஷக்ரா கையில் தஞ்சமடைந்தது.

கிழக்கு மண்டல வீரர்கள் அவுட் என அப்பீல் செய்ய, நடுவர் அதை நிராகரித்தார். டிஆர்எஸ் கேட்பதா வேண்டாமா என குழப்பம் நிலவிய நிலையில், கடைசி விநாடியில் கேப்டன் சூரியவன்ஷி துணிந்து டிஆர்எஸ் கேட்டார். அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் பந்து லேசாக மட்டையை உரசிச் சென்றது உறுதியாக, ஜுரெல் அவுட் என நடுவர் அறிவித்தார். சூரியவன்ஷியின் சமயோசிதமான முடிவு முக்கிய விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

* ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ள ஒருநாள் போட்டித் தொடரில், தென் ஆப்ரிக்க வேகம் காகிசோ ரபாடா காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறுவார் என கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா தெரிவித்துள்ளது.

* 195 ரன்னில் சுருண்டது வடக்கு மண்டலம்: தெற்கு 40/2

பெங்களூரு, சிஓஇ வளாக 2வது மைதானத்தில் நேற்று தொடங்கிய துலீப் கோப்பை 2வது அரையிறுதியில், தெற்கு மண்டலம் அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட் செய்த வடக்கு மண்டலம், முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் கம்ரான் இக்பால் அதிகபட்சமாக 76 ரன் (182 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் வாதவான் 35 ரன், ஆயுஷ் 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினார். அர்ஷ்தீப் சிங் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் மண்டல பந்துவீச்சில் வித்வத் கவெரப்பா 4, நிதீஷ், தியாகராஜன் தலா 2, சாய்தேஜா, ஷ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய தெற்கு மண்டலம், முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்துள்ளது. ரிக்கி புயி 5 ரன் எடுத்து காம்போஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஷேக் ரஷீத் ரன் ஏதும் எடுக்காமல் குர்னூர் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். நாராயண் ஜெகதீசன் 34 ரன், கேப்டன் திலக் வர்மா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.