டுகாட்டி நிறுவனம், புதிய 2வது தலைமுறை டிசர்ட் எக்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 890 சிசி வி2 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 110 எச்பி பவரையும், 92 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தற்போது சந்தையில் உள்ள டிசர்ட் எக்ஸ் பைக்கில் 937 சிசி டெஸ்டாஸ்டிரெட்டா இன்ஜின் இதே திறனைத்தான் வெளிப்படுத்துகிறது. அதாவது, சிசி குறைவாக இருந்தாலும் அதன் திறன் குறையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், முன்புறம் 21 அங்குல வீல்கள், பின்புறம் 18 அங்குல வீல்கள் இடம் பெற்றுள்ளன. இருபுறமும் இயங்கக் கூடிய குயிக் ஷிப்பர், குரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், 6 வித ரைடிங்மோட்கள், 5 அங்குல டிஎப்டி ஸ்கிரீன் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
+
Advertisement
