துபாய் கார் பந்தயம்: தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது நடிகர் அஜித்குமாரின் அணி
08:05 PM Jan 10, 2025 IST
Share
Advertisement
துபாய்: துபாய் கார் பந்தயத்தில் 20 அணிகள் பங்குபெற்ற தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமாரின் அணி 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடைபெறும் 24H Dubai 2025 கார் ரேஸில் ஒவ்வொரு அணியில் இருக்கும் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் 24 மணி நேரமும் காரை ஓட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார் அஜித்குமார்.