புதிதாக உருவான வேளாங்கண்ணி, உத்திரமேரூருக்கு டிஎஸ்பிக்கள் நியமனம்; 59 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது;
சென்னை மாநில சைபர் கமாண்ட் மையம் டிஎஸ்பியாக இருந்த இலக்கியா வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக இருந்த உமாதேவி கடலூர் டிஎஸ்பியாகவும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னாமராவதி டிஎஸ்பியாக இருந்த கண்ணன் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல், கன்னியாகுமரி மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கண்ணதாசன் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் உதவி கமிஷனராகவும் புதுக்கோட்டை மாவட்டம் குற்றஆவணம் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த குமார், சென்னை தலைமையிடம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பியாக இருந்த சபரிநாதன் சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த கவுதம் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் டிஎஸ்பியாகவும் கோவை மாவட்டம் கருத்தம்பட்டி டிஎஸ்பியாக இருந்த தங்கராமன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னாமராவதி டிஎஸ்பியாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும் சிவகங்கை மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த பிரதீப் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் ஆரூர் டிஎஸ்பியாக இருந்த கரிகால்பரி சங்கர் கோவை மாவட்டம் கருத்தம்பட்டி டிஎஸ்பியாகவும் மயிலாடுதுறை மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக இருந்த மயில்சாமி தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த ராஜிவ் புதுக்கோட்டை மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த சந்திரசேகரன் திருவண்ணாமலை மாவட்டம் நிலம் அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய உதவி கமிஷனராக இருந்த நிக்சன் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வேளாங்கண்ணி டிஎஸ்பியாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த ராஜா ரவி தங்கம் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் சேலம் மாநகர உதவி கமிஷனர் ஹரிசங்கரி சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபாளையம் டிஎஸ்பியாக இருந்த காயத்ரி தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாகவும் சென்னை மாநில மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த முருகேசன் நாகப்பட்டினம் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பியாகவும் திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுபிரிவு உதவி கமிஷனராக இருந்த சுதீர்லால் மயிலாடுதுறை மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பியாகவும் சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சந்திரசேகரன் திருப்பூர் மாநகர மத்திய குற்ற ஆவணம் காப்பகம் உதவி கமிஷனராகவும் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த சரவணன் சேலம் டவுன் டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல், காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர் டிஎஸ்பியாகவும் தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாக இருந்த கணேஷ்குமார் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் டிஎஸ்பியாகவும் கடலூர் டிஎஸ்பியாக இருந்த ரூபன்குமார் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் டிஎஸ்பியாகவும் மதுரை டிவிஷன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த செந்தில்குமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி தலைமையிட டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநில சைபர் கமாண்ட் சென்டர் டிஎஸ்பியாக இருந்த கீதா சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பியாகவும் மதுரை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளந்திரையன் திண்டுக்கல் மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பியாக இருந்த பூசை துரை, சோசியல் மீடியா மையம் டிஎஸ்பியாகவும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் டிஎஸ்பியாக இருந்த வெங்கடேசன் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபாளையம் டிஎஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டிஎஸ்பியாக இருந்த பொன்னரசு தேனி மாவட்டம் உத்தமபாளையம் டிஎஸ்பியாகவும் புதுக்கோட்டை மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி சிவகுமார் மதுரை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும் நீலகிரி மாவட்டம் தேவாலா டிஎஸ்பியாக இருந்த ஜெயபாலன் திருப்பூர் மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் உதவி கமிஷனராகவும் திருவண்ணாமலை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் சண்முகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டிஎஸ்பியாகவும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டிஎஸ்பியாக இருந்த பாண்டிஸ்வரி சிவகங்கை மாவட்டம் குற்ற ஆவணம் காப்பகம் டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாகவும் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பியாக இருந்த சுகுமார் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாக இருந்த ஜெய்சிங் ஈரோடு மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பியாகவும் திருச்சி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் உதவி கமிஷனராக இருந்த தங்கதுரை கோவை மாவட்டம் குற்ற ஆவணம் காப்பகம் டிஎஸ்பி என தமிழகம் முழுவதும் 59 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.