Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசி சிகரெட் தராததால் டென்சன் கடையை சூறையாடிய ‘குடிமகன்கள்’

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஓசியாக சிகரெட் தரவில்லை எனக் கூறி குடிமகன்கள் இருவர் பெட்டிக் கடையை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அம்பலபுளி பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் குடி போதையில் 2 பேர் கடைக்கு வந்தனர். இலவசமாக சிகரெட் கேட்டுள்ளனர். ஆயிரம் ரூபாயும் கேட்டுள்ளனர்.

பணத்தை பின்னர் ஜிபே செய்வதாகவும் கூறியுள்ளனர்.இதற்கு சண்முகவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, சண்முகவேல் இரண்டு சிகரெட்டுகளை கொடுத்தார். ஆனால் தாங்கள் கேட்டவுடன் சிகரெட்டை ஏன் கொடுக்கவில்லை என குடிமகன் இருவரும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினர். பாட்டில்களை தூக்கி சாலையில் வீசினர். சத்தம் கேட்டு கூட்டம் கூடியதும் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.