Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கை, கால்களை கட்டி டிரைவர் படுகொலை: குளத்தில் சடலம் வீச்சு

திண்டுக்கல்: ​திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளிப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளப்பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார், அந்த குளப்பகுதிக்கு சென்று நீண்ட நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் கண்டறிய முடியவில்லை. மேலும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரும் அங்கு வந்து தேடுதல் வேட்டை நடத்தினார். ​

சுமார் 5 மணிநேர தேடுதலுக்கு பிறகு நேற்று அதிகாலை 1 மணியளவில் வாலிபர் சடலம் கண்டறியப்பட்டது. அந்த நபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். முதல் கட்ட விசாரணையில், கொலையானவர் திண்டுக்கல் அருகே உள்ள மொண்டியபட்டியை சேர்ந்த டிரைவர் கரண்ராஜ் (28) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார், அதே பகுதியை சேர்ந்த குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.