Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செல்போன் பேசியபடி அரசு பஸ்சை இயக்கிய ஓட்டுநர்

உடுமலை : உடுமலையில் ஒற்றை கையால் செல்போன் பேசியடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.உடுமலையில் இருந்து வீதம்பட்டி செல்லக்கூடிய 4ம் எண் அரசு பேருந்தில் ஓட்டுநர் செல்போனில் பேசியபடி நீண்ட நேரமாக ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கியுள்ளார்.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கியதை பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிரவே அந்தக் காட்சி தற்பொழுது வைரலாகியுள்ளது.சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணி நீக்கம்

செல்போன் பேசியபடி டிரைவர் பஸ் ஓட்டி சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில்,போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் ஓட்டி சென்ற சந்திரசேகரை (62) பணிக்கு வர வேண்டாம் என கூறி வேலையில் இருந்து நிறுத்தினர். ஏற்கனவே டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரசேகர் தற்போது தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.