Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கனவாகிப்போன உலகக்கோப்பை கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

ஸ்பெயின் உடனான போட்டி தொடங்குவதற்கு முன்பு, இதுதான் தான் விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடர். ஆனால், இந்த போட்டி எனது கடைசி போட்டியாக இருக்காது’’ என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்திருந்தார். ஆனால், ஸ்பெயின் உடனான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ரொனால்டோவுக்கு உலகக்கோப்பை என்பது பெரும் கனவு.

இந்த உலகக்கோப்பைதான் அவர் விளையாடும் கடைசி போட்டி என்பதால், பெரும் எதிர்ப்பார்ப்பு அவரிடம் இருந்தது. ஆனால் அவருடைய உலகக்கோப்பை கனவு முடிந்ததால் ரொனால்டோ கண்ணீருடன் விடை பெற்றார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அழுத ரொனால்டோவை சக வீரர்கள் ஆறுதல் கூறினார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ரொனால்டோவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர். இருப்பினும் உலகக்கோப்பை ஆசை கனவுடன் முடிந்ததால் சோகத்துடன் வெளியேறினார்.

* 2006ம் ஆண்டு உலகக்கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய ரொனால்டோவுக்கு இது 6வது உலக்கோப்பை. இந்த தொடரில் 3 கோல்கள் மட்டுமே ரொனால்டோ அடித்து உள்ளார். மொத்தம் உலகக்கோப்பை போட்டியில் 11 கோல் அடித்து உள்ளார்.

* 41 வயதான ரொனால்டோ உலகக்கோப்பை வரலாற்றில் 27 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி 30 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

* போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப், 2 முறை யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பையும் வென்றுள்ளார் ரொனால்டோ. ஆனால், உலக புகழ்மிக்க கால்பந்து வழக்கையில் உலகக்கோப்பை மட்டுமே அவரால் வெல்ல முடியாத கனவாக போய்விட்டது.

* சர்வதேச கால்பந்து போட்டியில் 146 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 233 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

* உலகக்கோப்பையில் ரொனால்டோவின் சிறந்த சாதனை 2006ம் ஆண்டு அரையிறுதி வரை அழைத்து சென்றதுதான்.

* ‘இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கணும்’

தோல்விக்கு பின் ரொனால்டோ கூறுகையில், ‘இப்படி ஒரு உலகக்கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. நான் எனது முழு முயற்சியையும், மிகச்சிறந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்கள் ஆட்டம் நன்றாக இருந்தது. இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. இது எனது கடைசி உலகக்கோப்பை என்பது உண்மை.

ஆனால் தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அமைதியாக யோசித்த பிறகே முடிவு எடுப்பேன்.போர்ச்சுகல் அணிக்காக 3 கோப்பைகளை வென்றுள்ளேன். எங்கள் அணி வென்றதிலேயே மிகப்பெரிய கோப்பை என்றால் அது யூரோ 2016 கோப்பைதான். உண்மையை சொல்ல வேண்டுமானால் யூரோ கோப்பை உலகக்கோப்பை வெற்றிக்கு இணையானது. அது எப்போதும் இருக்கும்’’ என்றார்.