Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 150 அப்ரன்டிஸ்

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் கர்நாடகா, பெங்களூரில் உள்ள கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளன.

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங்): 75 இடங்கள். உதவித் தொகை ரூ.9,000.

துறை வாரியாக காலியிடங்கள்: (மெக்கானிக்கல்/புரடக்‌சன்/ இன்டஸ்ட்ரியல்-30,ஏரோநாட்டிக்கல்/ஏரோ ஸ்பேஸ்-15, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/ டெலிகாம் இன்ஜினியரிங்-10, கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் சயின்ஸ் மற்றும் ெடக்னாலஜி இன்ஜினியரிங்-15, மெட்டலர்ஜி/மெட்டீரியல் சயின்ஸ்-4, சிவில் இன்ஜினியரிங்-1.

தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்கள் அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடங்கள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிரேட் அப்ரன்டிஸ்: 25 இடங்கள். உதவித் தொகை: ரூ.7,000.

துறை வாரியாக காலியிடங்கள்: (ஐடிஐ): மெஷினிஸ்ட்-3, பிட்டர்-4, டர்னர்-3, எலக்ட்ரீசியன்-3, வெல்டர்-2, ஷீட் மெட்டல் வொர்க்கர்-2, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்-8.

தகுதி: மேற்குறிப்பிட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

3. கிராஜூவேட் அப்ரன்டிஸ் (இன்ஜினியரிங் அல்லாதது): 30 இடங்கள். உதவித் தொகை ரூ.9,000. பாட வாரியாக காலியிடங்கள் ( பி.காம்-10, பிஎஸ்சி- வேதியியல், இயற்பியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர்-5, பி.ஏ- நிதி/பேங்கிங்-5, பிசிஏ-5, பிபிஏ-5).

தகுதி: மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

4. டெக்னீசியன் அப்ரன்டிஸ் (டிப்ளமோ): 20 இடங்கள். உதவித் தொகை ரூ.8,000.

துறை வாரியாக காலியிடங்கள்: மெக்கானிக்கல்/புரடக்‌சன்/ டூல் மற்றும் டை டிசைன்-10, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்-7, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் நெட் வொர்க்கிங்-3.

தகுதி: மேற்குறிப்பிட்ட ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

டிகிரி/டிப்ளமோ/ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 2021ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

வயது: 08.05.2025 தேதியின்படி 18 முதல் 27க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

ஐடிஐ முடித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், பி.இ.,/டிப்ளமோ/ பி.காம்., பிஎஸ்சி., பி.ஏ., உள்ளிட்ட பட்டதாரிகள் www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களுடைய கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை பதிவு செய்து விட்டு, அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ இணையதளம் ‘லிங்க்’கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை: (08.05.2025)