Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஆர்டிஓ வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜேஆர்எப் பணி

பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ:

1. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்: 2 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் கேட் தேர்வில் முதல் வகுப்பி்ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் கேட் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

உதவித் தொகை ரூ.27,000.நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து admin.pxe@gov.in என்ற இ. மெயில் முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பத்தில் மொபைல் எண் மற்றும் இ. மெயில் முகவரியை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (08.01.2026).