மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் ரூ.91.65 என்ற வரலாறு காணாத சரிவை சந்தித்தது. நேற்று ரூ.91.62 ஆனது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் முறையாக ரூ.90ஐ தாண்டியது. அதன்பிறகு சில நாள் முன்பு ரூ.91ஐயும் தாண்டியது. நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.65 என்ற வரலாறு காணாத சரிவை சந்தித்தது. இந்நிலையில் நேற்று வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.91.54 ஆக இருந்து. பின்னர் ரூ.91.48 வரை உயர்ந்தது. வர்த்தக இடையில் ரூ.91.68 என்ற புது உச்சம் தொட்டது. எனினும், வர்த்தக முடிவில் நேற்று முன்தினத்தை விட 3 காசுகள் வலுவடைந்து ரூ.91.22 ஆனது.
+



