முதுகுவலி சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் பலாத்காரம்: மருத்துவர் அதிரடி கைது
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முதுகுவலி சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அக்குபஞ்சர் மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் அனில் குமார் (42). அக்குபஞ்சர் மருத்துவர் ஆவார். வடகரை அரசு மருத்துவமனை அருகே கிளினிக் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் முதுகுவலி சிகிச்சைக்காக அனில் குமார் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு அறையில் வைத்து அனில்குமார் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து இளம்பெண் வடகரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement