தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன, மொழி, வரலாறு, திமுகவை காக்கின்ற தலைவராக உதயநிதி உருவெடுத்து வருகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

Advertisement

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் ”உழைப்பின் இமயம் உதயநிதியால் கண்டறியப்பட்ட கழக களப்போரில் துணை நிற்கும் கருத்தியல் சொற்போர் வீரர்கள்” எனும் பொது தலைப்பின்கீழ் நேற்று மாலை 5 மணி அளவில் சைதை தேரடி தேடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தனித்துவம் படைக்கும் இளைஞர் நலம் எனும் தலைப்பின்கீழ்-நாமக்கல் மோகநிதி, சரித்திரம் படைக்கும் சமூக நலம் தலைப்பின் கீழ்- செங்கல்பட்டு சிவரஞ்சனி, சாதனை படைக்கும் கல்வித்துறை எனும் தலைப்பின் கீழ் - தஞ்சை வியானி விஸ்வா மற்றும் மகத்துவம் படைக்கும் மருத்துவத்துறை எனும் தலைப்பின்கீழ்- விருகை சந்தோஷ் ஜெய் ஆகிய இளம் பேச்சாளர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்த மேடை வரலாற்று சிறப்புமிக்க மேடை, பல்வேறு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு கொக்கரித்து கொண்டிருக்கிற சீமானுக்கு இடம் தந்து, ஒலிப்பெருக்கி அமைத்து கொடுத்ததும் இதே மேடைதான். பேரறிஞர் அண்ணா பேசிய மேடை, தந்தை பெரியார் பேசிய மேடை, கலைஞர் பலமுறை பேசிய மேடை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேசிய மேடை, துணை முதல்வர், கழகத்தின் எதிர்காலம் உதயநிதி பேசிய மேடை, இப்படி பலர் சைதை தேரடித்திடலில் பேசியிருக்கிறார்கள். மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்த நானே இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். திமுக அரசின் சாதனை, அரசு நிறைவேற்றிய திட்டங்கள், கொள்கை, மொழி, இனம் இவற்றை பற்றி ஒரு மணிநேர பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் தகுதி, திறமை இருக்கிறது.

முதலமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி, இவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பேசுவதற்கான அமைப்பை ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினர். தொகுதியைவிட்டு வெளியில் இன்றைய தமிழ்நாட்டின் முதல்வருக்கு பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது என்றால், அது சைதாப்பேட்டையில்தான், அதுவும் இளைஞர் எழுச்சிநாள் என்ற தலைப்போடு நடத்தப்பட்டது என்றால் சைதாப்பேட்டையில்தான். இன்னும் ஒரு கூடுதல் சிறப்பாக, இளைஞர் அணியின் செயலாளர், தமிழகத்தின் இனத்தை, மொழியை, கழகத்தை இன்னுமொரு அரை நூற்றாண்டுக்கு காக்கிற தலைவராக உருவெடுத்து வருகிற உதயநிதி பிறந்தநாளை வருகிற 27ம்தேதி தொடங்கி டிசம்பர் 27 ம்தேதி வரை ஒரு மாத காலம் 182 தெருமுனை கூட்டங்களோடு நடத்த இருக்கிறது. 30 நாட்களும், 182 கூட்டங்கள் விளம்பரப் படுத்தி, உதயநிதிஸ்டாலினின் புகழ்பாடுகிற கூட்டங்களாக இருக்கவேண்டும் என்கிற வகையில் நடத்த இருக்கிறோம். கூட்டத்தை சிறப்பிப்பதற்கு அனைத்து பகுதிகளிலும் திரண்டு நடத்தி தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement