திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு
அதேபோல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சக்கரபாணியும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தலைமைக் கழகம் நியமித்துள்ளது. அவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.