Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்வதை செய்வோம் செய்வதை சொல்வோம்: கனிமொழி எம்பி பேச்சு

சேலம்: வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்கும் கூட்டம் சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘‘திமுக தேர்தல் அறிக்கை என்றால், எல்லாராலும் ஏற்று கெள்ளக்கூடிய வகையில் இருக்கும். கலைஞரின் காலம் தொட்டு தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தேர்தல் அறிக்கையில் அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சொல்வதை தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற தாரக மந்திரத்தோடு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். நீங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்து, பின்னர் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டுமோ அதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் உங்களுக்கு அதனை நிறைவேற்றி தருவார்’’ என்றார். இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு விசித்திரமான நிலை நடைபெறுகிறது.

எதிர்க்கட்சி தலைவர், மன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித்தலைவர் பேச முயற்சித்தும், பேச முடியவில்லை. அமைச்சர்களே தடுக்கிறார்கள். குடியரசுத் தலைவர் உரையின் மீது விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், பிரதமர் அவைக்கு வராமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காரணம் கேட்டால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களால் பிரதமர் தாக்கப்படுவார் என கூறுகின்றனர். இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.