ராமநாதபுரம்/சிவகங்கை : ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு ராமநாதபுரம் மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். எம்.பி. நவாஸ் கனி, எம்.எல்.ஏக்கள் முருகேசன், கரு.மாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் திமுக, காங்கிரஸ் மதிமுக, அ.இ.பா.பிளாக், கம்யூனிஸ்ட் கட்சிகள் எஸ்டிபிஐ, தமுமுக ,மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மையம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய முஸ்லிம் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, சத்தியமூர்த்தி, சுந்தரராஜ், முன்னாள் எம்.பி.பவானி, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், முன்னாள் சேர்மன்கள் பிரபாகரன், ஆனந்த், அ.இ.பார்வர்ட் பிளாக், மாநில இளைஞரணி செயலாளர் சப்பாணி முருகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்ப ரகு, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், திருப்புல்லாணி முன்னாள் ஒன்றிய தலைவர் புல்லாணி, திமுக வர்த்தக அணி மாவட்ட தலைவர் திருமாறன், திருப்புல்லாணி வடக்கு உதயகுமார், காங்கிரஸ் கட்சி ராஜாராம் பாண்டியன், மக்கள் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் வையமுத்து, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சுரேஷ், தொழிலாளர் அணி துணை செயலாளர் பாஸ்கரன், திமுக ஒன்றிய செயலாளர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்ஐஆர் எனும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் செய்ய வேண்டும். அவசர கோலத்தில் குறைந்த கால அவகாசத்தில் செய்யக்கூடாது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், திமுக மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ்ரூசோ, நகர் செயலாளர் துரைஆனந்த், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், கென்னடி, ஆரோக்கியசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், மாவட்டத்தலைவர் சஞ்சய், மாநில பொது செயலாளர் சிஆர்.சுந்தர்ராஜன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பாலையா, மதிமுக, திராவிடர் கழகம், இ.யூனியன் முஸ்லீக், மநீம, மமக, மஜக, மூமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், திமுக நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
