Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

*ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

தர்மபுரி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தர்மபுரியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) மேற்கொண்டு வருகிறது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று தர்மபுரி மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். இதில், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் பேசியதாவது: ஒன்றிய பாஜ அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக செயல்பட வைக்கிறது. இதை கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. எஸ்ஐஆர் சீராய்வை நடத்த போதிய கால அவகாசம் வழங்கவில்லை. கடந்த 4ம் தேதி முதல் வரும் டிசம்பர் 4ம் தேதி வரை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் செய்ய முடியாது என கூறியுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரி வராது. இச்செயல் வாக்குரிமையை பறிப்பதாக உள்ளது. பீகார் மாநிலத்தில் 60 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

தமிழகத்தில் பாஜ கால் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றிய அரசு செயல்படுகிறது. வழக்கு தற்போது நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும் வரவேற்போம். ஆனால், வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், தர்மச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், திமுக மாநில வர்த்தக அணி சத்தியமூர்த்தி, நகர செயலாளர் கவுதம்,தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, முன்னாள் நகர செயலாளர் மே.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் தி.க.மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், சிபிஎம் சிசுபாலன், சிபிஐ கலைச்செல்வன், மதிமுக ராமதாஸ், விசிக பாண்டியன், தி.க.சரவணன், தமிழ்செல்வன், விசிக சாக்கன்சர்மா, கருப்பண்ணன், நந்தன், கொமக அசோகன், ஆனந்தகுமார், செந்தில்முருகன், அருணாசலம், இளங்கோ, சையத்அன்வர்பாஷா, சுபேதார், தவாக தவமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஏஎஸ் சண்முகம்,

பெரியண்ணன், காவேரி, வைகுந்தம், பச்சியப்பன், செல்வராஜ், மல்லமுத்து, வீரமணி, கிருஷ்ணன், பிரகாஷ், டாக்டர் பிரபுராஜசேகர், சக்திவேல், சந்திரசேகர், சரவணன், அன்பழகன், எம்விடி கோபால், துணை செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், பொதுகுழு உறுப்பினர்கள் நடராஜன், வேலுமணி, சோலை மணி, பொன் மகேஸ்வரன், வக்கீல் அசோக்குமார் கோவிந்தன், ராஜா, மிதுன் காளியப்பன், வக்கீல்கள் சிவம், தாஸ், சந்திரசேகர் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.