Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகை: கூட்ட நெரிசலைக் குறைக்க 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், 5 சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி, மானாமதுரைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி வரும் வெள்ளியன்று தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு மானாமதுரைக்கும் திருச்சிக்கு 6.30 மணிக்கும் சிறப்பு ரயிலும், தாம்பரம் - மானாமதுரை இடையே 06159 என்ற எண் கொண்ட சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை மாலை 4.35 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரையை அடையும்.

இதன் மறுமார்க்க ரயிலான 06160, நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குத் தாம்பரத்தைச் சென்றடையும். தாம்பரம் - மானாமதுரை இடையே 06161 என்ற எண் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 06162 என்ற எண் கொண்ட ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 3.45 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்த இரு ரயில்களும் தலா ஒரு சேவையாக இயக்கப்படும். திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் 06192 என்ற எண் கொண்ட ஒருவழி முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு, அதே நாள் காலை 11.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலும் ஒரு சேவையாக இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் 06191 என்ற எண் கொண்ட ஒருவழி முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில் ஒரு சேவையாக இயக்கப்படும். சென்னை எழும்பூர் - திருச்சி இடையே 06193 என்ற எண் கொண்ட சிறப்பு மெமு ரயில் நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். மறுமார்க்கத்தில் 06194 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை இரவு 10.45 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களாக இயக்கப்பட உள்ளன. மேற்கண்ட அனைத்து ரயில்களும் தலா ஒரு சேவை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.