தீபாவளியை ஒட்டி புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த 150 டன் குப்பைகள் அகற்றம்
Advertisement
புதுக்கோட்டை: தீபாவளியை ஒட்டி புதுக்கோட்டை மாநகரப்பகுதிகளில் குவிந்த சுமார் 150 டன் குப்பைகள் அகற்றம். இதில் 50 டன் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். 400 தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வலர்களும் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
Advertisement