Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கண்பார்வை பாதித்தவர்கள் விவரம் வெளியீடு

திருவள்ளூர்: தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கண் பார்வை பாதித்தவர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகுதான் பட்டாசு கடை வைப்பதற்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அந்த விதிமுறைகளின்படி பட்டாசு கடை வைக் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டு கை, கால்கள், கண் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 2023, 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பட்டாசு வெடித்தபோது மாவட்டம் வாரியாக ஆண், பெண் மற்றும் குழந்தைகள் காயம் அடைந்தனர். கண் பார்வை பாதிக்கப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனை குழுமங்களில் சிகிச்சை பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் 397 பேரும் 2024ம் ஆண்டில் 439 பேரும் காயம் அடைந்துள்ளனர். 2025ம் ஆண்டில் சென்னை - 65, மதுரை - 138, கோயம்பத்தூர் - 121, திருநெல்வேலி - 59, பாண்டிச்சேரி - 114, திருப்பதி - 32, சேலம் -86, தஞ்சாவூர் - 6, திண்டுக்கல் - 21, தேனி - 77, திருப்பூர்- 30, தூத்துக்குடி - 15, உடுமலைப்பேட்டை - 12 என மொத்தம் - 776 பேர் காயம் அடைந்துள்ளனர். 2023ம் ஆண்டில் 172 பேரும் 2024ம் ஆண்டில் 174 குழந்தைகளும் காயம் அடைந்துள்ளனர். 2025ம் ஆண்டில் சென்னை - 35, மதுரை - 21, கோயம்பத்தூர் - 68, திருநெல்வேலி 32, பாண்டிச்சேரி - 60, திருப்பதி - 22, சேலம் - 37, தஞ்சாவூர் - 3, திண்டுக்கல் - 12, தேனி - 23, திருப்பூர் - 12, தூத்துக்குடி - 12, உடுமலைப்பேட்டை - 7 ஆக மொத்தம் - 344 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பட்டாசு வெடி விபத்தில் கண் பார்வை முழுவதும் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் விவரம்;

2023ம் ஆண்டில் 45 பேருக்கும் 2024ம் ஆண்டில் 49 பேருக்கும் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் சென்னை - 6, மதுரை - 29, கோயம்பத்தூர் 17, திருநெல்வேலி - 7, பாண்டிச்சேரி - 11, தஞ்சாவூர் - 3, திண்டுக்கல் - 3, திருப்பூர் - 2, உடுமலைப்பேட்டை - 2, தேனி - 1, திருப்பதி, சேலம், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் 81 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் 81 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2023, 2024ம் ஆண்டுகளை காட்டிலும் கடந்த 2025 ம் ஆண்டு கண்பார்வை இழப்பு அதிகரித்துள்ளது.