Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி சீசனில் அடாவடி; பதஞ்சலி நெய் உள்பட ரூ.9 கோடி கலப்பட உணவு பொருள் பறிமுதல்: 19 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

மும்பை: மகாராஷ்டிராவில் பண்டிகைக் காலத்தையொட்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பதஞ்சலி நெய் உள்பட ரூ.9.01 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் 7 மண்டலங்களில் உள்ள 114 வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தரம் குறைந்த மற்றும் கலப்பட சந்தேகத்தின் பேரில் சத்ரபதி சம்பாஜிநகரில் செயல்பட்டு வந்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமை விநியோகஸ்தரான திவ்யா மகாவிரக் நிறுவனத்திடம் இருந்து ரூ.20.20 லட்சம் மதிப்புள்ள 2,279.7 லிட்டர் பதஞ்சலி பசு நெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுமட்டுமின்றி தானே மாவட்டம் பிவாண்டியில் உள்ள அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,44,218 கிலோ சமையல் எண்ணெய்யும், சாத்தாராவில் 20,560 கிலோ அரிசி, பருப்பு, வெல்லம் போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டன. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த அதிரடி சோதனையில் சுமார் ரூ.9.01 கோடி மதிப்பிலான 3.53 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு விதிகளை மீறிய 19 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, தீபாவளி சீசனில் கலப்படத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.