Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மதுரை, மேலூர் அருகே வீட்டில் தீபாவளி பட்டாசு வெடித்து விபத்து: இளைஞர் உயிரிழப்பு!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் வீட்டில் தீபாவளிக்காக வாங்கி வைத்த பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி சேர்ந்த யோகவனி என்பவருடைய மகன் லோகேஷ் இவர் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் மனோஜ் என்பாரும் தீபாவளி கொண்டாடுவதற்காக சிவகாசி சென்று வெடி வாங்கி லோகேஷ் வீட்டின் மொட்டைமாடியில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த வெடி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் வீட்டில் மேல் தளம் இடிந்து விழுந்ததில் லோகேஷ், மனோஜ் மற்றும் யோகவனி ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த மூவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி பெறப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிக்கு வங்கி வைத்த வெடி வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.