Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கக்கட்டண வசூலை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது.

எனவே, மக்கள் நலன் கருதி, தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளையொட்டி கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாக திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். பண்டிகை கால நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைக்க வேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும்.

சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.