நியூயார்க்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “அமெரிக்கா அல்லது யுனெடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்று சொல்லும்போது, பன்முகத்தன்மை என்ற சொல் அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. அதேசமயம் பாரதம் என்று சொல்லும்போது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்து விவாதிக்கப்படுகிறது.
பாரதத்தை பொறுத்தவரை ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை என்பது அதன் மரபணுவிலேயே ஊறி உள்ளது. பாரதத்துக்கு வழங்கப்பட்ட இலக்கு என்னவெனில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உண்மையை உணர்வதும், அதனை உலகத்துக்கு உணர்த்துவதும் ஆகும். நாம் அனைவரும் ஒன்றே. பன்முகத்தன்மை காரணமாகவே அந்த ஒற்றுமை அழகுப்படுத்தப்படுகிறது. எனவே, பன்முகத்தன்மை கொண்டாடப்பட, மதிக்கப்பட, ஏற்று கொள்ளப்பட வேண்டும்” என்றார்.



