Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவண்ணாமலையில் வரும் 24ம் தேதி மகா தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையேற பக்தர்களுக்கு இந்த ஆண்டும் தடை நீட்டித்து. வருகின்ற 24ம் தேதி தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்வதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் தீப மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.

அதன் முக்கிய நிகழ்வாக 10ம் நாள் விழாவாக வருகின்ற 24ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அதனை தொடர்ந்து 2,668 அடி உயரம் கொண்ட மகா தீபம் மலையின் மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். இந்த மகா தீப நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

குறிப்பாக கடந்த காலங்களில் 2000- த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்து வந்தார்கள். கடந்த 2024ம் ஆண்டு மலை மீது நிலச்சரிவு ஏற்பட்டு மலை ஏறக்கூடிய வழிகளில் பள்ளம் ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை.

அதேபோன்று இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போலவே மலை ஏற பக்த்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.