நோய்களை கண்டறிய முக்கிய பங்காற்ற உள்ள கண்கள்; கண்களை பார்த்தால் இதயத்தின் ஆரோக்கியம் தெரிந்துவிடும்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு
முகத்தை பார்த்து ஒருவரின் குணத்தை கண்டறியலாம் என்பார்கள், இது நடைமுறையில் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், கண் விழிகள் பார்த்து ஒருவரின் உடல் நலம், நோய் பாதிப்புகள் நுண்ணிய அளவில் கண்டறியலாம் என்று அறிவியல் ரீதியில் பல்வேறு பரிசோதனைகளின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நமது உடலில், நுண்ணிய அளவில் மறைந்திருக்கும் நோய்களுக்கான தடயங்களையும் கண்டுபிடிக்க முடியுமாம், கண்களை பார்த்து இதயத்தின் ஆரோக்கியம், சொல்ல முடியும். அதேபோல் ஒருவரின் வயது, எவ்வளவு வேகமாக கடந்து விடுகிறது அல்லது முதுமைக்குள் எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதை நுண்ணிய அளவில் தெரிந்து கொள்ள முடியும். கண்களில் சிறிய ரத்த நாளங்கள் ஆழமாக பரிசோதனை செய்தால், ஒருவரின் இருதய பாதிப்பு எந்த அளவுக்கு வாய்ப்பு உள்ளது. ரத்த நாளங்களின் ஆரோக்கியம், உயிரியல் தொடர்பான முதுமை நிலையும் கண்கள் கண்டறிந்து விடும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கண்கள் மீது பரிசோதனை
கனடா நாட்டில் உள்ள மெக்மாஸ்டர் என்ற பல்கலைகழகம் 74 ஆயிரம் மனிதர்களிடம் ஒருங்கிணைந்து கண்கள் மூலம் நோய் கண்டறியும் பரிசோதனை நடத்தியது. அவர்கள் விழித்திரை, மரபணு தரவு, ரத்த மாதிரி பகுப்பாய்வுகள் 4 வெவ்வேறு அறிவியல் ஆய்வகங்கள் இடமிருந்து பெறப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம், ஆரோக்கியம் குறித்து கண்கள் மூலம் கண்டறியும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பரிசோதனை எப்படி செய்யப்படும்?
விழித்திரை என்பது கண்ணில் ஒரு முக்கிய பகுதியாகும், கண் விழித்திரை பரிசோதனை (ஸ்கான்) மூலம் மரபியல், ரத்த உயிரியல் குறிப்பான்கள் ஒருங்கிணைப்பு செய்வதால், இருதய நாளங்களின் அமைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதில் வெற்றி அடைந்துள்ளோம். உடலில் சின்ன ரத்த நாளங்களில் நடைபெறும் மாற்றங்களை கண்டறிய கண் விழிகள் வெளிச்சம் போட்டு காட்டும் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
புரதங்களின் செயல்பாடுகள்
நோய் கண்டறிவதில், மேற்கொள்ளப்பட்ட பலகட்ட ஆய்வுகளில் குறிப்பாக ரத்த உயிரியல் குறிப்பான்களை மரபணு தரவு, குறித்து மதிப்பாய்வு செய்கிறது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண் ரத்த நாளங்களில் மாற்றத்தின் பின்புறத்தில் உள்ள உயிரியல் தொடர்பான காரணங்கள் கண்டறிந்தனர். ரத்த நாளங்களில் வரும் மாற்றங்களுக்கு இரு புரதங்களை கண்டறிந்தனர். முதுமை வேகத்தை குறைப்பது, இருதயம் சார்ந்த நோய் பாதிப்பை குறைத்தல், எதிர்காலத்தில் மருந்துகள் தயாரிக்க வாழ்க்கை காலத்தை மேம்படுத்த இவ்வகை புரதங்கள் பயன்படும் என்று பேராசிரியர் மேரி பிகேய்ரே குறிப்பிட்டார்.
ஆய்வின் சிறப்பு
இருதயத்திற்கு ரத்தம் அனுப்பும் ரத்த நாளங்களில் மிக குறைவாக இரத்த நாளங்கள் இருந்தால் இதயத்திற்கு பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் அதிகப்படியான வீக்கம். குறைந்த ஆயுட்காலம் போன்ற உயிரியல் தொடர்பான முதுமை அறிகுறிகள் நுண்ணிய அளவில் விழிகள் காட்டுகிறது. நோய் கண்டறிதல், சிகிச்சை முறையில் எந்த மருத்துவ கருவையும் உடலில் செலுத்தாமல் கண் விழிகள் மூலம் நோய் நுண்ணிய அளவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறைகள் மிக முக்கிய பங்காற்ற உள்ளன.
