ரூ.1.55 லட்சம் வரை சலுகை
மகிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, பிஇ 6 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓராண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்த மாதத்துக்கான தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி இவை அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றுக்கு ரூ.1.55 லட்சம் வரை சலுகை கிடைக்கும்.
ரூ.50,000 மதிப்பிலான 7.2 கிலோவாட் ஏசி பாஸ்ட் சார்ஜர், ரூ.30,000 மதிப்பிலான உதிரிபாகங்கள், கார்ப்பொரேட் தள்ளுபடி ரூ.25,000, எக்ஸ்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் ரூ.30,000 வரை, ரூ.20,000 மதிப்பில், பொது இடங்களில் இலவச சார்ஜிங் சலுகை ஆகியவை இதில் அடங்கும். எனினும், குறிப்பிட்ட டீலர்கள் தரப்பில் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதிலும், முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை எனவும், டிசம்பர் 20ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் எனவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
பிஇ6-ல் 6 வேரியண்ட்களும், எக்ஸ்இவி 9இ-ல் 5 வேரியண்ட்களும் உள்ளன. பிஇ6 துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.18.9 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.26.9 லட்சம். எக்ஸ்இவி 9இ துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.21.9 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.30.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால், வேரியண்ட்களுக்கு ஏற்ப 556 கி.மீ தூரம் (59 கிலோவாட் அவர் பேட்டரி) முதல் 682 கி.மீ தூரம் (79 கிலோவாட் அவர் பேட்டரி) வரை செல்லலாம் என அராய் சான்றளித்துள்ளது.