Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.2.89 லட்சம் தள்ளுபடி!

காவாசாக்கி நிறுவனம், நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.2.89 லட்சம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 998 சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 205 எச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கின் ஷோரூம் விலை சுமார் ரூ.20.79 லட்சம். தற்போதைய தள்ளுபடி சலுகையின் மூலம், இதன் விலை ரூ.17.9 லட்சமாக இருக்கும். இந்த தள்ளுபடி சலுகையை இந்த மாதம் 30ம் தேதி வரை இந்நிறுவனம் நீட்டிப்புச் செய்துள்ளது. இந்த பைக், பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக உள்ளது. இதை விட, சலுகையிடன் கூடிய காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ் 10 ஆர் விலை ரூ.5.35 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.