Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தினுஷாவின் தினுசான சாதனை!

இலங்கை வீரர் சோனல் தினுஷா நடப்பு தொடரில் இதுவரை அவுட்டான 3 இன்னிங்சில் 100, 84, 103 ரன் விளாசி சாதனை படைத்துள்ளார். 2வது இன்னிங்சில் அவர் 7 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், பேட்டிங் வரிசையில் 6வது அல்லது அதற்கு கீழே இறங்கிய வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது.

முன்னதாக, 2003ல் நியூசிலாந்தின் கிரெய்க் மெக்மில்லன் 237 ரன் எடுத்து படைத்த சாதனையை தினுஷா முறியடித்துள்ளார். கடந்த 48 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 இன்னிங்சில் 80+ ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் தினுஷாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அவருக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.