Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டிஜிட்டல் யூகத்தின் பெண்கள்: செயற்கை நுண்ணறிவும் தற்காப்பு முறைகளும்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்திற்குப் பல அபரிமிதமான நன்மைகளைத் தந்தாலும், அதன் மறுபக்கம் மனிதனின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு (UN Women) வெளியிட்ட “திருப்புமுனை: செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் இணையவழி வன்முறையின் தாக்கங்கள், வெளிப்பாடுகள் மற்றும்

தீர்வுகள்

“(Tipping Point: Online violence impacts, manifestations and redress in the AI age) என்ற அறிக்கை, இணைய வெளியில் பெண்கள் எதிர்கொள்ளும் நவீன கால வன்முறைகளை அப்பட்டமாக வெளிச்சத்திற்குக் கொண்டு

வந்துள்ளது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், டிஜிட்டல் தளங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான ஆலோசனைகள் இங்கே பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு (AI)

ஆயுதமாகப் பயன்படுத்தப்படுமா?

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழித் தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட மிகவும் எளிதாகவும், வேகமாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும் மாறியுள்ளன. குறிப்பாகத் தங்களைச் சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அதிகளவில் இலக்காக்கப்படுகின்றனர்.

ஐ.நா. சபையின் 119

நாடுகளை உள்ளடக்கிய

ஆய்வின்படி வெளிவந்த அதிர்ச்சித் தரவுகள்:

* இரட்டிப்பான வன்முறை: 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெண்கள் மீதான இணையவழி வன்முறைகள் தற்போது இரண்டு மடங்காக

அதிகரித்துள்ளன.

* பாலியல் தொல்லைகள் (33%): இணையத்தைப் பயன்படுத்தும் பெண்

களில் மூன்றில் ஒரு பங்குப் பெண்கள் தேவையற்ற பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

* தனிப்பட்ட தரவு திருட்டு (12%): பெண்களின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களும் தகவல்களும் திருடப்பட்டு, தவறான நோக்கங்களுக்காகப் பகிரப்படுகின்றன.

* டீப்ஃபேக் (Deepfakes) அச்சுறுத்தல் (6%): AI தொழில்நுட்பத்தின் மூலம் முகங்களை மாற்றி, தத்ரூபமான ஆபாசப் போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கி மிரட்டுவது அதிர்ச்சி

யளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.

பாதிப்பின் ஆழம்: மனநலம் மற்றும் வாழ்வாதார முடக்கம் இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளும், போலிப் படங்களும் ஒரு பெண்ணின் டிஜிட்டல் வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, அவர்களது நிஜவாழ்க்கையையும் மனநலத்தையும் கடுமையாகச்

சிதைக்கின்றன.

* மனநலச் சிதைவு: இணைய வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஊடகவியலாளர்களில் 24.7% பேர் கடும் மன அழுத்தம் (Depression) மற்றும் பதற்றத்திற்கு (Anxiety) ஆளாகின்றனர். மேலும், 13% பேர் ‘பி.டி.எஸ்.டி’ (PTSD) எனப்

படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய தீவிர மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* சுய தணிக்கை (Self-Censorship): அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, 41% பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிடுவதையோ விவாதிப்பதையோ முற்றிலும் தவிர்க்கின்றனர். 45% பெண் பத்திரிகையாளர்கள் உண்மைகளை எழுதத் தயங்குகின்றனர்.

* பொருளாதார மற்றும் வாழ்வாதார இழப்பு: பல பெண்கள் இந்தத் தொடர் தாக்குதல்களால் தங்களின் வேலை மற்றும் தொழிலை இழக்க நேரிடுகிறது.

“என்னை இணையத்தில் முத்திரையிட்டு பொய்ப் பரப்புரை செய்தபோது என் சொந்த நாட்டில் வாழ்வதே அச்சமாக மாறியது. இதனால் எனது புலனாய்வுப் பத்திரிகைத் தொழிலில் இருந்து விலக வேண்டியதாயிற்று.”

- இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பெண் பத்திரிகையாளர் (ஐ.நா. அறிக்கை)

சட்டப் பாதுகாப்பில் உள்ள இடைவெளிகள் உலக வங்கியின் தரவுகளின்படி, உலக அளவில் 40%-க்கும் குறைவான நாடுகளிலேயே இணையவழித் துன்புறுத்தல் மற்றும் சைபர் ஸ்டாக்கிங் (Cyberstalking) ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான சட்டங்கள் உள்ளன. மேலும், பெரும் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்களும் (Big Tech) இத்தகைய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகின்றன. சட்டம் மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்களின் பாதுகாப்பை மட்டுமே நம்பியிருக்க முடியாத சூழலில், பெண்களின் சுய விழிப்புணர்வே முதல் அரணாக மாறுகிறது.

டிஜிட்டல் தற்காப்பு: பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்

இணைய வன்முறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பெண்கள் பின்வரும் தொழில்நுட்ப மற்றும் தனிநபர் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்

பிடிக்க வேண்டும்:

* புகைப்படங்களில் தனியுரிமை (Privacy in Photos): சமூக வலைத்தளங்களில் உயர்தர (High Resolution) மற்றும் முகம் மிகத் தெளிவாகத் தெரியும் புகைப்படங்களைப் பொதுவெளியில் (Public Mode) பகிர்வதைத் தவிர்க்கவும். ‘Profile Lock’ வசதியைப் பயன்படுத்துங்கள். முகங்கள் தெளிவாக உள்ள படங்களை AI கருவிகள் எளிதாக டீப்ஃபேக் செய்யப் பயன்படுத்திக்கொள்ளும்.

* கணக்குப் பாதுகாப்பு (Two-Factor Authentication - 2FA): உங்களின் வாட்ஸ்அப், மின்னஞ்சல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கணக்குகளுக்கும் இரு காரணி அங்கீகாரத்தை (2FA) உடனடியாகச் செயல் படுத்துங்கள். இது உங்கள் கணக்குகள் திருடப்படுவதை (Hacking) பெருமளவு தடுக்கும்.

* சந்தேகத்திற்குரிய இணைப்புகள் (Beware of Links): அறிமுகமில்லாத எண்களிலிருந்தோ அல்லது மின்னஞ்சல்களிலிருந்தோ வரும் லிங்குகளை (Links) ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். இது உங்கள் மொபைல் அல்லது கணினியில் உள்ள தரவுகளைத் திருடப் பயன்படும் ஃபிஷிங் (Phishing) முறையாக இருக்கலாம்.

* உடனடிப் புகாரும் ஆதாரமும் (Report Immediately): உங்கள் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது மிரட்டல்கள் வந்தாலோ உடனடியாக அந்தப் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் (Screenshot) எடுத்து ஆதாரமாகப் பத்திரப்படுத்தவும். தயங்காமல் 1930 என்ற தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணிற்கோ அல்லது இணையதளம் வாயிலாகவோ (Cyber Crime Portal) புகார் அளியுங்கள்.

* மௌனம் வேண்டாம் - ஆதரவைத் தேடுங்கள்: மிரட்டல்களுக்குப் பயந்து அமைதியாக இருப்பது குற்றவாளிகளுக்கு மேலும் துணிச்சலைத் தரும். எனவே, எந்தவொரு அச்சுறுத்தலையும் குடும்பத்தினர், நம்பத்தகுந்த நண்பர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் பகிர்ந்து தகுந்த உதவியைப் பெறுங்கள்.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவி மட்டுமே; அது பெண்களின் குரலை ஒடுக்கும் ஆயுதமாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. உலகளாவிய சட்டங்களும் தொழில்நுட்பக் கொள்கைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது நீண்டகாலத் தேவையாக இருந்தாலும், உடனடியாகச் செயல்பட வேண்டியது நாம்தான். ஒவ்வொரு பெண்ணும் டிஜிட்டல் தளங்களில் அதிக விழிப்புணர்வுடனும், தொழில்நுட்பப் புரிதலுடனும் செயல்படுவதன் மூலமே இந்த நவீன கால வன்முறைகளை நாம் வேரறுக்க முடியும். பாதுகாப்பான இணையப் பயன்பாடு, பெண்களின் அடிப்படை உரிமை. மேலும் புகைப்படம் பகிர்ந்தால் ஆபத்து வரும், நம்மை மிரட்டுவார்கள் என்கிற பழைய பழமொழி எல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் வேலைக்கு உதவாது. நம் முகம் நம் அங்கீகாரம், நம் அங்கீகாரத்தை சிதைக்க நினைத்தால் அதற்கான பாடம் புகட்டுவது ஒவ்வொரு பெண்ணுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டின் முக்கியக் கடமை.

- ஷாலினி நியூட்டன்.