சென்னை: சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். உயரம் குறைவாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி இல்லங்கள் அமைக்கப்படும். நகர்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும். ரத்த சோகையை தடுக்க ரூ.38 கோடியில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.
தன்னார்வ நிறுவனம் மூலம் அறிவுசார் மாற்றுத்திறனாளிக்கு தொழிற் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு Virtual Reality முறையில் கற்பிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். அரசு கட்டடங்களில், குழந்தை மையங்களில் ரூ.12 கோடியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படும்



