Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டைமண்ட் லீக் பைனல்ஸ்: நீரஜ் சோப்ரா தகுதி

புதுடெல்லி: பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற உள்ள டைமண்ட் லீக் பைனல்ஸ் (செப். 4,5) தடகள போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் பங்கேற்க இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். நடப்பு சீசனில் நடந்த 5 போட்டிகளில் 2ல் மட்டுமே பங்கேற்ற நீரஜ், தரவரிசையில் 12 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்து நேரடியாக பைனல்ஸில் களமிறங்குகிறார். ஜூன் 19ல் தோஹாவில் நடந்த போட்டியிலும், ஆக.21ல் லாசேனில் நடந்த போட்டியிலும் நீரஜ் 2வது இடம் பிடித்ததன் மூலமாக டைமண்ட் லீக் பைனல்ஸ் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

காயம் காரணமாக தனது முழு திறனையும் வெளிப்படுத்த முடியாமல் சற்று திணறி வரும் நீரஜுக்கு, முன்னணி வீரர்கள் ருமேஷ் பதிரகே, ஆண்டர்சன் பீட்டர்ஸ், கெஷோர்ன் வால்காட், கர்டிஸ் தாம்சன், ஜூலியஸ் யெகோ ஆகியோர் கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர். 2026 சீசனில் அதிகபட்சமாக 90.40 மீட்டர் தூரம் எறிந்து அசத்திய ஜெர்மனி நட்சத்திரம் ஜூலியன் வெபர், காயம் காரணமாக பிரசல்ஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.