தாராபுரம்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (6ம் தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குண்டடம், சூரியநல்லூர், தாராபுரம் நகரம், கொண்டரசன்பாளையம், வேங்கிபாளையம் உள்பட தாராபுரம் தொகுதியில் வாக்குகள் உள்ள போலீசார் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மொத்தம் 195 போலீசாரில் 128 போலீசார் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
+
Advertisement

