Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் துணை மேலாளர்

பணி: துணை மேலாளர்: 15 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1).

வயது: 27.03.2026 அன்று பொது மற்றும் ஒபிசியினருக்கு 34க்குள். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஒபிசியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். பொதுப்பிரிவு/ பொருளாதார பிற்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சிஏ/சிஎம்ஏ/எம்.காம்/ எம்பிஏ (நிதி) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் கட்டம் மற்றும் 2ம் கட்ட எழுத்துத் தேர்வுகள், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.nhidcl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2026.