Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டெல்லியில் பரபரப்பு: அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசிய இந்து அமைப்பினர்

புதுடெல்லி: சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு வெளியான சாவா படத்தின் எதிரொலியாக டெல்லியில் உள்ள அக்பர், ஹுமாயூன் சாலைகளின் பெயர் பலகைள் அழிக்கப்பட்டு சாவா படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயர் பலகைக்கு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசி, மன்னர் மகாராணா பிரதாப்பின் புகைப்படத்தை ஒட்டினர். ஐஎஸ்பிடி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள மகாராணா பிரதாப்பின் சிலையை சிலர் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்த இந்து அமைப்பினர், பாபர், ஹுமாயூன் சாலைகளின் பெயர் பலகைகளிலும் கருப்பு மை பூசுவோம் என தெரிவித்தனர்.

இதுபற்றி கருப்பு மை பூசிய அமித் ரத்தோர் என்பவர் ஏஎன்ஐ நிருபரிடம் கூறுகையில், ‘மன்னர் மகாராணா பிரதாப்பை அவமதிப்பதை இந்தியா ஒருபோதும் பொறுத்து கொள்ளாது. ஐஎஸ்பிடி காஷ்மீர் கேட்டில் நடந்த சம்பவத்தை டெல்லி அரசும், போலீசாரும் மூடி மறைக்க பார்க்கிறார்கள். குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

மேலும் அக்பர், பாபர் மற்றும் ஹுமாயூன் போன்ற படையெடுப்பாளர்களின் அடையாள பலகைகளை நாங்கள் தொடர்ந்து அகற்றுவோம். மேலும் அரசாங்கத்தின் கண்களை திறந்து ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கிறோம் என்று மற்றொருவர் தெரிவித்தார்.பெயர் பலகையை கருப்பு மை பூசி அளித்த அமித் ரத்தோர் என்பவர் இந்து ராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தேசிய தலைவர் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.