Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக தலைவர் பங்கேற்காதது ஏன் என எங்களுக்கு தெரியாது: திருமாவளவன் பேட்டி

மதுரை: மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் தற்போது பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்குத் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கான அடுத்தகட்டப் போராட்டத்தை இந்தியா கூட்டணி விரைவில் அறிவிக்க உள்ளது. தவெக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பது புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவர் ஏன் பங்கேற்கவில்லை, அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்த பின்னணி எங்களுக்குத் தெரியாது. வெற்றி பயண திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம் பாதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக விவாதங்கள் உள்ளது. மின்வெட்டு ஆங்காங்கே இருக்கிறது. மேலும் மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதல்வர் நேரடியாக விரைந்து தலையிட வேண்டும். இது எதிர்கட்சிகளின் புகார் என கடந்துபோகாமல், பொதுமக்கள் பிரச்னை என கவனம் செலுத்தி குறைபாடுகளை களைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

* ஆட்சியை கலைக்க முயற்சியா?

‘‘தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறதா என தெரியாது. அதற்கு வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். தவெகவிற்கு ஆதரவு தரும் கூட்டணி கட்சியினர் ஆதரவை திரும்ப பெற போவதில்லை என உறுதிபடுத்தியிருக்கிறோம். ஆட்சி கலைய வாய்ப்பில்லை என நான் கருதுகிறேன். தவெக எம்எல்ஏக்கள் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.