Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெல்லியில் குடும்ப தகராறில் பயங்கரம்: 17 வயது சிறுமியை கொன்று உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய கொடூரம்

புதுடெல்லி: டெல்லியின் புராரி பகுதியில் 17 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முகுந்த்பூர் பகுதியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவருக்கும், அவரது உறவினரான சிறுமிக்கும் (17) இடையே ஏற்கனவே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வட டெல்லியின் புராரி பகுதியில் உள்ள இருட்டான இடத்தில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சூட்கேஸ் ஒன்றை தூக்கிக் கொண்டு செல்வதாக போலீசாரின் சிறப்புப் படை பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக தனது உறவினர் சிறுமியை கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து புராரியில் உள்ள அஜித் விஹார் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சோபித் சக்சேனா கூறுகையில், ‘குடும்பப் பிரச்னை காரணமாகவே கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.