தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லி கார் குண்டுவெடிப்பில் பள்ளி தோழி பலியால் இதயம் நொறுங்கிவிட்டது: பாலிவுட் நடிகை பாயல் கோஷ் உருக்கம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பில் தனது நெருங்கிய பள்ளித் தோழி உயிரிழந்த சோகத்தில் நடிகை பாயல் கோஷ் ஆழ்ந்துள்ளார். டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில், பிரபல நடிகை பாயல் கோஷின் நெருங்கிய பள்ளித் தோழியான சுனிதா மிஸ்ராவும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி, திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தனது தோழியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள நடிகை பாயல் கோஷ், மிகுந்த வேதனையுடன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர்மல்கக் கூறுகையில், ‘என் தோழி சுனிதா உயிருடன் இல்லை என்பதை என் மனதால் நம்பவே முடியவில்லை. அவள் மிகவும் கலகலப்பானவர்; எப்போதும் சிரித்த முகத்துடன் நேர்மறையான கருத்துகளை மட்டுமே கூறுவார். இவ்வளவு கொடூரமான முறையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது நம்ப முடியவில்லை.

அவர் எனக்கு ஒரு தோழி என்பதை விட, என் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார். நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்; எங்கள் கனவுகள், சிரிப்புகள், போராட்டங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம்’ என்று உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகக் கூறிய அவர், பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Related News