Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்; டெல்லி கார் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஒன்றிய அரசு சகித்துக் கொள்ளாது என்று கூறினார்.