அகமதாபாத்: குஜராத், மெஹ்சானாவில் நடந்த விழா ஒன்றில் காணொளி வாயிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதில் ஒன்றிய அரசும் உள்துறை அமைச்சகமும் உறுதியாக உள்ளன. அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியக்கூடாது என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 11 ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் இந்தப் போராட்டத்தை வழிநடத்துவதில் பிரதமர் முன்னணியில் உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
