Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டெல்லியில் சிஎன்ஜி காஸ் கிலோவுக்கு ரூ.3.89 அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் சிஎன்ஜி காஸ் விலை உயர்ந்துள்ளது. இதனால், கார் உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட தடையால் சர்வதேச அளவில் இயற்கை எரிவாயு(சிஎன்ஜி) விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவின்(எல்என்ஜி) மூலப் பொருளின் விலை அதிகரித்ததை அடுத்து, டெல்லி யில் சி.என்.ஜி விலையை இந்திரபிரஸ்தா காஸ் நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதன்படி நேற்று ஒரு கிலோ சிஎன்ஜி ரூ. 3.89 உயர்த்தப்பட்டதால், அதன் விலை கிலோவுக்கு ரூ.83.09-லிருந்து ரூ.86.98-ஆக அதிகரித்துள்ளது.